உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மறைமலை அடிகள் பிறந்தாள் விழா

மறைமலை அடிகள் பிறந்தாள் விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் மறைமலை அடிகள் பிறந்தநாள் மற்றும் பயிற்சி பட்டறை துவக்க விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். மாணவன் சஞ்சய் வரவேற்றார். தமிழ்த்துறை தலைவி பிரவீனா வாழ்த்துரை வழங்கினார். மாணவர் வீரபாரதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கோயம்புத்துார் நினைவாற்றல் மேம்பாட்டு பயிற்றுனர் மற்றும் ஊக்குவிப்பாளர் ரிஷிகேசவன், தமிழ் மற்றும் தமிழர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதை வாழ்நாள் பணியாக கொண்டு தொண்டாற்றியவர் மறைமலை அடிகள், என்றார்.நிகழ்ச்சியில் தமிழ்த்துறை பேராசிரியர்கள் பிந்து, பாண்டியன், பன்னீர் செல்வம், கோமதி, பார்த்திபன், நித்யா, சுபலட்சுமி, பரசுராமன், சின்ன பொண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் விமல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை