உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாயமான சிறுவனை தேடும் பணி தீவிரம்

மாயமான சிறுவனை தேடும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் அஜீஸ் மகன் அப்துல்லா,16; தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறார்.நேற்று மாலை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் குளிப்பதற்காக தச்சூர் பகுதியில் உள்ள கிணற்றுக்கு அப்துல்லா சென்றார். பின், அப்துல்லாவை காணவில்லை. தகவலறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, சந்தேகத்தின் பேரில் கிணற்றில் இறங்கி தேடினர். 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 60 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பதால் அப்துல்லாவை தேடி கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இரவு 9.30 மணிக்கு மேலாகியும் அப்துல்லா கிடைக்காததால் தேடும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை