| ADDED : ஜூலை 18, 2024 10:58 PM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே சகோதரிகள் இருவர் துாக்கில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த வி.கூட்ரோட்டை சேர்ந்தவர் மணிமாறன் மனைவி பழனியம்மாள்,60; இவர்களுக்கு யுவராஜ், வினோத் என, இரு மகன்கள் உள்ளனர். யுவராஜ் வௌிநாட்டில் உள்ளார். கணவரை இழந்த பழனியம்மாள் தனது இளைய மகன் வினோத் உடன் வசித்து வந்தார்.பழனியம்மாளின் மூத்த சகோதரி செல்லம்மாள்,73; இவர் திருமணமான சில நாட்களிலேயே கணவரை பிரிந்து தனது தங்கை பழனியம்மாள் குடும்பத்துடன் சேர்ந்து வசித்து வந்தார்.சகோதரிகள் இருவரும் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தனர். நேற்று காலை 6:00 மணிக்கு மேலாகியும் பால் வராததால், வாடிக்கையாளர்கள் பழனியம்மாளின் வீட்டிற்கு பால் வாங்க வந்தனர். வீட்டில் இருவரையும் காணவில்லை. அருகில் உள்ள கொட் டகைக்கு சென்று பார்த்தபோது சகோதரிகள் இருவரும் தனித்தனியே துாக் கில் இறந்து கிடந்தனர்.தகவலறிந்த சின்னசேலம் போலீசார் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.