உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை வெப்ப பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரத்தியேகமாக உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:வெயிலின் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் வெயில் தாக்கத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.இந்த பிரத்தியேக சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் வெயிலினால் ஏதேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவில் சேர்ந்து உரிய சிகிச்சை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி