உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சியில் பங்குனி உத்திரத்தையொட்டி ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இக்கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 9 நாட்கள் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், உற்சவர் விநாயகர் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிகளை சிறிய தேரில் எழுந்தருளச் செய்து, கோவில் உட்பிரகாரம் வந்தது.நேற்று முன்தினம் இரவு கோவிலில் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, நேற்று காலை நடந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர். இன்று அலகுபோடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர்பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை