| ADDED : ஆக 21, 2024 06:32 AM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில், மனவளகலை மன்ற அறக்கட்டளை இரண்டாமாண்டு துவக்க விழா, வேதாத்திரி மகரிஷி 114வது ஜெயந்தி விழா, மனைவி நல வேட்பு நாள் விழா என முப்பெரும் விழா நடந்தது.மனவள கலை மன்ற தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், நளினா தேவி வரவேற்றனர். விழுப்புரம் மண்டல தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் வேல்முருகன், துணைத் தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் உலக சமுதாய சேவா சங்க விரிவாக்க இயக்குனர் தங்கவேலு பேசினார். விழாவில் 100க்கும் மேற்பட்ட தம்பதியர் பங்கேற்றனர்.வணிகப் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், விஜயகுமார், இன்னர் வீல் தலைவி சுபாஷினி ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.