உள்ளூர் செய்திகள்

பைக் மோதி மூவர் காயம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே நடந்து சென்றவர் மீது பைக் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி சாந்தி, 43; ஆனந்த் மனைவி ராசாத்தி, 40; இருவரும் குலதீபமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே கோவில் திருவிழாவிற்கு செல்ல சாலையைக் கடந்தனர். அதே ஊரைச் சேர்ந்த முகமது நம்தலி மகன் சுபான், 42; பைக்கை வேகமாக ஓட்டி வந்து சாந்தி மீது மோதியதில், சாந்தி, ராசாத்தி மற்றும் பைக்கை ஓட்டி வந்த சுபான் மூவரும் காயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் பைக்கை ஓட்டிச் சென்ற சுபான் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ