| ADDED : மே 28, 2024 11:14 PM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான கணேஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில், உறவினர்கள், நண்பர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள், நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர்.வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களை திருக்கோவிலுார் முன்னாள் ஒன்றிய குழு சேர்மேனும், தந்தையுமான கோவிந்தராஜ் - சிவகாமி வரவேற்றனர். திருக்கோவிலுார் ஐந்துமுனை சந்திப்பு, தாசார்புரம், சந்தப்பேட்டை, மணம்பூண்டி, அரகண்டநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் 5,000க் கும் மேற்பட்டோர்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் துாய்மை பணியாளர் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தொழிலதிபர் கணேஷ் மற்றும் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.