| ADDED : ஜூலை 24, 2024 08:55 PM
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி உள்ளிட்ட போலீசார் மீது லஞ்சம் வாங்கியதாக சில மாதங்களுக்கு முன்பு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் கடந்த 19ம் தேதி சங்கராபுரம் அடுத்த பொரவலுார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சுகந்தி,35; குடும்ப பிரச்னை காரணமாக கணவர் மீது புகார் அளித்தார். இதன் மீது விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, அந்த பெண்ணை காப்பகத்திற்கு அனுப்பினார்.புகார் அளித்தவர் மீதே போலீசார் நடவடிக்கை எடுப்பது குறித்து சுகந்தி தரப்பினர் கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத் சதுர்வேதியிடம் முறையிட்டனர். அதனையொட்டி, சுகந்தியை காப்பகத்திற்கு செல்வதை தடுத்து நிறுத்தியதுடன், நேர்மையாக விசாரணை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., உறுதியளித்தார்.இந்நிலையில், கடந்த 22ம் தேதி திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி., சம்பவம் குறித்து போலீசாரிடம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து எஸ்.பி., ரஜத் சதுர்வேதியின் பரிந்துரையை ஏற்று, இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷாமிட்டல் நேற்று உத்தரவிட்டார்.இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.