உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்து 6 பேர் காயங்களுடன் தப்பினர்

சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்து 6 பேர் காயங்களுடன் தப்பினர்

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயங்களுடன் உயிர்தப்பினர்திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவகிரி மகன் அன்புராஜ் 25. டிரைவரான இவர், மகேந்திரா வேனை சுற்றுலாவுக்காக ஊட்டியிலிருந்து கும்மிடிபூண்ட்டிக்கு ஓட்டி சென்றார். நேற்று காலை 5 மணியளவில் உளுந்துார்பேட்டை தாலுகா கெடிலம் மேம்பாலம் அருகே சென்றபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மோகன் 35, பிரபாகரன் 41, அவரது மனைவி லட்சுமி 39, மகன் புகழேந்தி 15, மகள் ஆண்ட்ரியா 9, டிரைவர் அன்புராஜ் ஆகிய 6 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இது குறித்து திருநாவலுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ