| ADDED : ஜூலை 22, 2024 07:52 PM
சின்னசேலம், : சின்னசேலத்தில் தமிழ்நாடு கிராம வங்கி கிளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.சின்னசேலம் மெயின்ரோட்டில் தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வந்தது. இந்நிலையில், வங்கி கிளை ரயில் நிலைய சாலையில் நேற்று முதல் புதிய கட்டடத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டது.நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கிராம வங்கியின் வட்டார மேலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். வங்கியின் கிளை மேலாளர் அருண்குமார் வரவேற்றார். பி.டி.ஓ., செந்தில்முருகன் கிளையை திறந்து வைத்தார். கிராமத்தின் ஒலி இயக்குனர் சக்தி கிரி, மேலாளர் மேகலா, கட்டட உரிமையாளர் முருகேசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.நிகழ்ச்சியில், வங்கியின் வாடிக்கையாளர் இறந்ததால் அவரது வாரிசு கவிதா என்பவருக்கு பாரத பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா காப்பீடு திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.மேலும், வட்டார மேலாளர் மோகன்ராஜ் மகளிர் குழுக்களுக்கு 73 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், வங்கியின் மகளிர் குழுக்கள், வியாபாரிகள், விவசாயிகள், சின்னசேலம் துணை மேலாளர் மெய்யழகன், அரசம்பட்டு கிளை மேலாளர் ரவிச்சந்திரன், காசாளர்கள் பிரதாப், அகிலா மற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் சக்திவேல், ரோஷன் உட்பட பலர் பங்கேற்னர்.