உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபானம் விற்ற இருவர் கைது

மதுபானம் விற்ற இருவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலீசாரின் அதிரடி ஆய்வில் அரசின் தடையை மீறி மதுபானம் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனக வள்ளி மற்றும் கருப்பைய்யா ஆகியோர் தனித்தனியாக தங்களது போலீஸ் குழுவுடன் நேற்று முன்தினம் மாலையில் அதிரடி ஆய்வு நடத்தினர்.அப்போது பெருவங்கூர் பகுதியில் பஸ் ஸ்டாப் பகுதியில் ரங்கன் மகன் ரஞ்சித்,27; என்பவரும், ரோடு மாமாந்துார் பகுதியில் பாலகிருஷ்ணன் மகன் சின்னத்தம்பி, 44; என்ப வரும், மே-1, தொழிலாளர் தினத்தில் அரசின் தடையை மீறி அனுமதியின்றி மதுபானம் விற்றது தெரிய வந்தது.கள்ளக்குறிச்சி போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ