உள்ளூர் செய்திகள்

மது விற்ற இருவர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மது விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நெடுமானுார் கிராமத்தில் வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த கண்ணன், 43, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று தேவபாண்டலம் கிராமத்தில் சாராயம் விற்ற ரவி, 50, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை கைபற்றினர். இருவர் மீதும் வழக்கு பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ