உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அண்ணாமலை வருகையால் ரூட் மாறி சென்ற உதயநிதி

அண்ணாமலை வருகையால் ரூட் மாறி சென்ற உதயநிதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அண்ணாமலை வருகையால் உதயநிதி செல்லும் வழி மாற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி பகுதியில் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, அமைச்சர் உதயநிதி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, த.மா.கா., தலைவர் வாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வந்தனர். இவர்கள் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகே உள்ள நீதிமன்றம் வழியாக கருணாபுரம் பகுதிக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு ,அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சென்றனர்.ஆனால் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார். இதனால் அவர் அப்பகுதியில் இருந்து செல்வதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அமைச்சர் உதயநிதி கருணாபுரம் பகுதிக்கு நீதிமன்றம் வழியாக செல்வது தொடர்பாக போலீசார் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கருணாபுரம் பகுதிக்கு அமைச்சர் உதயநிதி செல்வதற்கு பதிலாக மாற்று பாதையான கோட்டைமேடு வழியாக செல்ல ஏற்பாடு செய்தனர். இதனால் அமைச்சர் உதயநிதி கோட்டைமேடு பகுதி வழியாக கருணாபுரம் பகுதிக்கு சென்றார். அங்கு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு மீண்டும் கோட்டைமேடு பகுதி வழியாக புறப்பட்டுச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை