உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி துவக்கம்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி துவக்கம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 20ம் தேதி முதல் வரும் அக்டோபர் 18ம் தேதி வரை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் வீடுகள் தோறும் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி துவங்கியது.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:வரும் 2025 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி, நேற்று 20ம் தேதி செவ்வாய் முதல் வரும் அக்டோபர் 18ம் தேதி வரை ஓட்டுச்சாவடி நிலை அலுவலரால் வீடுகள் தோறும் சென்று வாக்காளர்கள் சரிபார்ப்பு பணி செய்யப்படுகிறது. அத்துடன் ஓட்டுச்சாவடிகளை திருத்தியமைத்தல், மறுசீரமைத்தல், ஓட்டுச்சாவடி பிரிவு, பகுதிகளை மறுசீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் 29ம் தேதி வெளியிடப்படும்.இதற்காக நேற்று 20ம் தேதி முதல் வரும் அக்டோபர் 18ம் தேதி வரை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் வீடுகள் தோறும் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி துவங்கியது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ