உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் தி.மு.க., வேட்பாளருக்கு வரவேற்பு

கள்ளக்குறிச்சியில் தி.மு.க., வேட்பாளருக்கு வரவேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மலையரசனுக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளராக தியாகதுருகம் நகர செயலாளர் மலையரசன் அறிவிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி நகருக்கு நேற்று முன்தினம் வருகை தந்த மலையரசனுக்கு நான்கு முனை சந்திப்பில் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளித்தனர். கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆகியோர் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பேசினர். கள்ளக்குறிச்சி நகர செயலாளர் சுப்ராயலு வரவேற்றார்.நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், எத்திராஜ், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், அவைத்தலைவர் ராமமூர்த்தி, மகளிரணி விமலா மனோஜ், இளைஞர் அணி தாகப்பிள்ளை, மாணவரணி விஜய் ஆனந்த், சார்பு அணி பொன்முடி ராயர், குமார், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், சத்தியமூர்த்தி, அன்பு மணிமாறன், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, பெருமாள், பாரதிதாசன், துரை முருகன், ஊராட்சி கூட்டமைப்புத் தலைவர் ஜெய்சங்கர் மற்றும் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி