மேலும் செய்திகள்
கரும்பு தோட்டத்தில் தீ; 2 ஏக்கர் எரிந்து சேதம்
10-Oct-2025
பா.ம.க., தலைவர் பிறந்த நாள் விழா
09-Oct-2025
மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு
09-Oct-2025
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் கீழையூர் டேனிஷ் மிஷன் நடுநிலைப் பள்ளியில் உலக வெண்புள்ளிகள் விழிப்புணர்வு தின விழா கொண்டாடப்பட்டது.உலக வெண்புள்ளிகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர், கீழையூர், டேனிஷ் மிஷன் நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் ஹேனி ஸ்டெல்லா தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் கஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆசிரியர் குமார் வரவேற்றார்.அறிவியல் இயக்க தலைவர் ஜானகிராமன் வெண்புள்ளிகள் நோய் அல்ல, பிறருக்கு தொற்றாது, பரம்பரையாக வராது என்ற விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறினார்.தொடர்ந்து மாணவர்கள் வெண் புள்ளிகள் விழிப்புணர்வு பற்றிய உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் தேவமலர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியர் கிரேசி நன்றி கூறினார்.
10-Oct-2025
09-Oct-2025
09-Oct-2025