உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கணவரை தாக்கிய இருவர் மீது மனைவி புகார்

கணவரை தாக்கிய இருவர் மீது மனைவி புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மது வாங்கி தரும் தகராறில் கணவரை தாக்கியதாக இருவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த பெத்தாசமுத்திரம் பகுதியை சேர்ந்த அருணாசலம் மனைவி தனலட்சுமி,53; மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் தனது மனைவி தனலட்சுமியிடம், கடந்த ஏப்.24-ம் தேதிஅதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் வெங்கடேசன்,41; என்பவரிடமிருந்து பெருமாள் கோவில் பகுதிக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வரும்படி கூறினார்.ஆனால் வெகு நேரமாகியும் வெங்கடேசன் அங்கு வரவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் அங்கு வந்த வெங்கடேசனுக்கும், அருணாசலத்திற்கு வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த இந்த தகராறில் வெங்கடேசன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த ஹரிஹரன்,17; ஆகிய இருவரும் சேர்ந்து அருணாசலத்தை தாக்கி, கொலை மிரட்டினர் விடுத்தனர்.தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்