உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின்சாரம் தாக்கி பெண் சாவு

மின்சாரம் தாக்கி பெண் சாவு

கள்ளக்குறிச்சி: சாத்தனுாரில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த சாத்தனுாரை சேர்ந்தவர் சேகர் மனைவி இனிமைதங்கம்,38. இவர், நேற்று காலை 5:30 மணியளவில் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தை பெருக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, மின்கசிவுடன் இருந்த இரும்பு பைப் மீது இனிமைதங்கத்தின் கை பட்டது. இதில், மின்சாரம் தாக்கி, இனிமைதங்கம் துாக்கி வீசப்பட்டார்.அவரை உறவினர்கள் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து இனிமைதங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை