உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு பயிலரங்கம்

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு பயிலரங்கம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கலை - அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிலரங்கம் நடந்தது.ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவன தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தார். கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் அசோக் வரவேற்றார். கல்வி நிறுவன நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் வாழ்த்துரை வழங்கினார்.பஞ்சாப் சண்டிகர் பல்கலைக்கழக உள்தரமதிப்பீட்டக்குழு இயக்குனர் கார்த்திகேயன் நடேசப்பிள்ளை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியை வணிகவியல் துறை தலைவர் அருள் தொகுத்து வழங்கினார். கணினி அறவியல் துறை தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி