உள்ளூர் செய்திகள்

உலக மருத்துவ தின விழா

கள்ளக்குறிச்சி : கல்லை தமிழ் சங்கம் சார்பில் உலக மருத்துவ தின விழா நடந்தது. விழாவிற்கு சிறப்பு தலைவர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் இளங்கோவன், ரமேஷ், ஜீவா, சங்கர், வழக்கறிஞர் அரங்கநாதன் முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் சண்முகம் வரவேற்றார். ஆசுகவி ஆராவமுதன் திருக்குறள் அதிகாரத்திற்கு உரை விளக்கம் அளித்தார். பேரவை செயலாளர் லட்சுமிபதி, துணை தலைவர் அம்பேத்கர், மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் வள்ளுவர் வழங்கும் மருத்துவம், மிகினினும் குறையினும், நோய் நாடி நோய் முதல் நாடி, உற்றவன் தீர்ப்பான் மருந்து ஆகிய தலைப்புகளில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன்(பொ) நேரு, டாக்டர்கள் நடேசன், மனோபாலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் செய்தி தொடர்பாளர் காயத்திரி உட்பட பலர் பங்கேற்றனர். மதிவாணன் தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ