உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மல்லாபுரத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு

மல்லாபுரத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மல்லாபுரத்தில் உலக மக்கள் தொகை தினம் முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விழிப்புணரவு கூட்டத்திற்கு புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரஞ்சிதா தலைமை தாங்கினார்.வட்டார சுகாதாரப் புள்ளியாளர் உதயசூரியன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் உலக மக்கள் தொகை முன்னிட்டு உயர் வரிசை பிறப்பு தடுத்தல், குடும்ப நல முறைகள் பின்பற்றுதல் பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர், ஊட்டச்சத்து பணியாளர்கள், ஆஷா ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவரும் மக்கள் தொகை கட்டுப்படுத்துதல் பற்றி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ