| ADDED : ஜூன் 26, 2024 02:27 AM
திருக்கோவிலுார் : யோகா தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே யோகா விழிப்புணர்வு முகாம் நடந்தது. திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் , உலக யோகா தினத்தை முன்னிட்டு, கல்லுாரி வளாகத்தில் யோகா விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார்.கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, துணைத்தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் ஈஷா யோகா குழுவின் தன்னார்வ தொண்டர்கள் சோலை, சரவணன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு யோகா பயிற்சி அளித்து அதன் பயன்களை விளக்கி கூறினர்.கல்லுாரி துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணி திட்ட அலுவலர் விக்னேஷ், உடற்கல்வி இயக்குனர்கள் சிவப்பிரகாஷ், நித்திஷா செய்திருந்தனர்.