உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் பைக் திருடிய வாலிபர் கைது

சங்கராபுரத்தில் பைக் திருடிய வாலிபர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கிடங்கன் பாண்டலத்தை சேர்ந்த செந்தில்குமார் ,38; இவர் கடந்த 26 ம் தேதி மாலை சங்கராபுரம் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறை அருகே பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.இது குறித்து செந்தில்குமார் சங்கராபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் பைக்கை திருடிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.இது சம்பந்தமாக சங்கராபுரம் அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த பழனி மகன் சதிஷ்குமார், 29; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து திருடு போன பைக்கை பறிமுதல் செய்தனர். கைதான சதிஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ