உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா விற்பனை ரூ.1000 அபராதம்

குட்கா விற்பனை ரூ.1000 அபராதம்

கள்ளக்குறிச்சி : பொது இடங்களில் புகை பிடித்த, மற்றும் குட்கா விற்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமையிலான சுகாதாரத் துறையினர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.அப்போது பஸ் நிலையத்தில் புகை பிடித்த 4 பேருக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து காய்கறி மார்க்கெட், பள்ளிக்கு அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ற கடை உரிமையாளர்கள் 3 பேருக்கு தலா 1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை