உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மலையில் சிறப்பு சேவை முகாம் 1,400 கோரிக்கை மனுக்கள்

மலையில் சிறப்பு சேவை முகாம் 1,400 கோரிக்கை மனுக்கள்

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலையில் கடந்த 6 நாட்கள் நடந்த சிறப்பு சேவை முகாமில் 1,400 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.கல்வராயன்மலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தேசிய தொல்குடியினர் தின சிறப்பு முகாம் கடந்த 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடந்தது. முகாமில் மின்சார வாரியம், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண், பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து துறை அலுவலர்கள் மூலம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.இதில் பொட்டியம் சிறப்பு சேவை முகாமில் 115 மனுக்கள், வெள்ளிமலை 528, மேல்பாச்சேரி 241, மூலக்காடு 60, சேராப்பட்டு 197, இன்னாடு 259 என மொத்தம் 1,400 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ