உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேசிய திறனறிவு தேர்வு 196 பேர் ஆப்சென்ட்

தேசிய திறனறிவு தேர்வு 196 பேர் ஆப்சென்ட்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 26 மையங்களில் நடந்த தேசிய திறனறிவு தேர்வு நடந்தது.அரசு பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய திறனறிவு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகள் 9 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றால், அவர்களின் வங்கி கணக்கில் மாதம் 1,000 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 26 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. 7,768 மாணவ, மாணவிகள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். அதில், 3,077 ஆண்கள், 4,495 பெண்கள் என மொத்தமாக 7,572 பேர் தேர்வெழுதினர். 196 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி