மேலும் செய்திகள்
மகள் மாயம் தாய் புகார்
09-Nov-2024
கள்ளக்குறிச்சி:வரஞ்சரம் அருகே வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வரஞ்சரம் அடுத்த நாகலுாரைச் சேர்ந்தவர் பரந்தாமன் மகள் பவித்ரா, 19; நர்சிங் மாணவி. இவர், கடந்த 9ம் தேதி கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மற்றொரு வழக்கு
வரஞ்சரம் அடுத்த உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி வீரம்மாள், 40; இவரை கடந்த 8ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இரு புகார்களின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
09-Nov-2024