மேலும் செய்திகள்
சேவா பாரதி கல்வி தான மையம் துவக்க விழா
5 minutes ago
ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பால் பரபரப்பு
7 minutes ago
நாளை மின் தடை (09.12.2025)
51 minutes ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குப்படுத்தும் பொருட்டு பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில், 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில் 13 மையங்களில் நடந்த தேர்வினை 3,593 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மனதிறன் தொடர்பாக 100 கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு, பிளஸ் 2 பயிலும் வரை அரசு பள்ளியில் பயின்றால் ஆண்டுதோறும் ரூ. 1000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
5 minutes ago
7 minutes ago
51 minutes ago