உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ரகோத்தமரின் 453வது ஆராதனை விழா

 ரகோத்தமரின் 453வது ஆராதனை விழா

திருக்கோவிலுார்: திரு க்கோவிலுார், மணம்பூண்டி ரகோத்தமர் சுவாமிகளின் 453வது ஆராதனை விழா துவங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உத்திராதி மடத்தின் குருஜி ஸ்ரீ சத்யார்த்தம தீர்த்த சுவாமிகள் தலைமையில் சன்னி தானங்களில் சிறப்பு பூஜையும், 11:00 மணிக்கு பஞ்சாமிர்தாபிஷேகம், மூல ராமருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நிர்மால்ய பூஜை, 7:30 மணிக்கு அகண்ட பாகவத பிரவசனம், நாளை 31ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு நிர்மால்ய பூஜை, 5:00 மணிக்கு மூல ராமருக்கு சிறப்பு பூஜைகள், 7:00 மணிக்கு அதிர்ஷ்டமானம் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி