உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ.62.15 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ.62.15 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 62.15 லட்சம் ரூபாய் வர்த்தகம் நடந்தது.கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விளை பொருட்களை மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி, மக்காச்சோளம் 950 மூட்டை, உளுந்து 430, வரகு 10, எள் 7, சிவப்பு சோளம் 5, நாட்டு கம்பு 4, தலா 2 மூட்டை வேர்க்கடலை, பாசி பயறு, எச்.பி., கம்பு, ராகி, ஒரு மூட்டை தட்டைப்பயிறு என 311 விவசாயிகள் 1,415 மூட்டை விளை பொருட்களை கமிட்டிக்கு நேற்று கொண்டு வந்தனர்.சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,131 ரூபாய், உளுந்து 9,224, வரகு 3,152, எள் 12 ஆயிரத்து 564, சிவப்பு சோளம் 6,160, நாட்டு கம்பு 5,689, வேர்க்கடலை 7,889, பாசி பயறு 7,928, எச்.பி.,கம்பு 2,879, ராகி 3,859, தட்டைப்பயறு 6,620 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டன. கமிட்டியில் மொத்தமாக 62 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

சின்னசேலம்

சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் 10 விவசாயிகள் 130 மூட்டை மக்காச்சோளம், 3 விவசாயிகள் 35 மூட்டை வரகு, 7 விவசாயிகள் 5 மூட்டை உளுந்து பயிர்களை கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,151 ரூபாய், வரகு 3215, உளுந்து 8,799 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 4 லட்சத்து 8 ஆயிரத்து 940 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

தியாகதுருகம்

தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் 493 விவசாயிகள் 2616 மூட்டை விளைபொருட்களை கொண்டு வந்தனர். நெல் 1632 மூட்டை, கம்பு 936, மக்காச்சோளம் 22, உளுந்து 15, தட்டை பயறு 5, ராகி 3, பச்சைப் பயறு 2, திணை ஒரு மூட்டை உள்ளிட்ட விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.சராசரியாக ஒரு மூட்டை நெல் ரூ.3052, கம்பு 5671, மக்காச்சோளம் 1989, உளுந்து 10190, தட்டைப் பயறு 4,889, ராகி 3139, பச்சைப் பயிறு 6,889, திணை 4589 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டன. மொத்தமாக 31 லட்சத்து 41 ஆயிரத்து 319 ரூபாய்க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை