உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலையில் 750 கிலோ வெல்லம் பறிமுதல்

கல்வராயன்மலையில் 750 கிலோ வெல்லம் பறிமுதல்

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் 750 கிலோ வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் நேற்று வண்டகப்படி கிராமத்தில் சாராய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆண்டி மகன் சரத்குமார், 29; என்பவரின் விவசாய நிலத்தில் சாராயம் காய்ச்ச 750 கிலோ வெல்லம் மற்றும் 12 லிட்டர் சாராயம் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. வெல்லம் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த பூச்சி மகன் மாணிக்கம், 30; என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை