உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 80 பவுன், ரூ.18 லட்சம் கொள்ளை

அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 80 பவுன், ரூ.18 லட்சம் கொள்ளை

சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே அரசு பஸ் கண்டக்டர் வீட்டின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் 80 சவரன் நகை மற்றும் ரூ.18 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ஜோதி,55; சங்கராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை கண்டக்டர். இவர் கடந்த 12ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி தமிழரசியுடன் புதுச்சேரியில் வசிக்கும் மகள் சவுந்தர்யா வீட்டிற்கு சென்றிருந்தார்.நேற்று மதியம் இவரது வீட்டின் பின்பக்க ஜன்னல் உடைத்திருப்பதாக தகவல் கிடைத்து, அருள்ஜோதி வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 80 சவரன் நகை, 18 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்து தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ