உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போதையில் சி.இ.ஓ.,வை திட்டிய ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

போதையில் சி.இ.ஓ.,வை திட்டிய ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மது போதையில் சி.இ.ஓ.,வைத் திட்டி பணி செய்யவிடாமல் தடுத்த அரசு பள்ளி ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி, 56; கூகையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலங்கியல் முதுகலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், பள்ளிக்கு சரிவர செல்லாமலும், பாடங்களை சரியாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் பிளஸ் 2 தேர்வையொட்டி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தேர்வு மையத்திற்கு முதன்மைக் கண்காணிப்பாளராக சின்னசாமி நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர், தேர்வு மையத்திற்கு செல்லவில்லை.இதன் காரணமாக கடந்த 5ம் தேதி மாலை 5:00 மணிக்கு சி.இ.ஓ., அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டார். அப்போது, மதுபோதையில் வந்த ஆசிரியர் சின்னசாமி, சி.இ.ஓ.,விடம் தகராறு செய்து, திட்டி பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.இது குறித்து சி.இ.ஓ., முருகன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசாமி மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ