உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கார் மோதியதில் வாலிபர் பலி

கார் மோதியதில் வாலிபர் பலி

திருக்கோவிலூர், : திருக்கோவிலூர் அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது கார் மோதியிதில் பலத்த அடிபட்டு இறந்தார்.சங்கராபுரம் அடுத்த நூரோலை கிராமத்தைச் சேர்ந்தவர் அருமைநாதன் மகன் விமல்ராஜ், 33; சென்னையில் வேலை செய்து வருகிறார். பணி முடிந்து நேற்று முன்தினம் காலை 10:45 மணிக்கு அத்திப்பாக்கத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு செல்வதற்காக திருவண்ணாமலையில் இருந்து பஸ் ஏறி அத்திப்பாக்கம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, சாலையை கடக்க முயன்றார்.அப்போது, திருவண்ணாமலையிலிருந்து, திருக்கோவிலூர் நோக்கி சென்ற கார் விமல் ராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ