உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தனியார் பஸ் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி

தனியார் பஸ் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி

சின்னசேலம்: சின்னசேலம் அருகே, தனியார் பஸ் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழந்தார்.சின்னசேலம் அடுத்த பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேலுமணி, 32;இவர் நேற்று மாலை 3:00 மணிக்கு, சின்னசேலம்- விருதாச்சலம் சாலையில் தனது பைக்கில் சென்றார். தோட்டப்பாடி அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ் வேலுமணி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். கீழ்க்குப்பம் போலீசார் அவரது உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ