உள்ளூர் செய்திகள்

ஆதார் சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி; சின்னசேலம் துணை அஞ்சலகத்தில் 5 நாட்கள் ஆதார் சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக, விருத்தாச்சலம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு அஞ்சல் துறையின் 'ப்ராஜக்ட் ஏரோவ் 2.0' என்ற திட்டத்தின் கீழ், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ள திட்டக்குடி, சின்னசேலம் மற்றும் திருவெண்ணெய்நல்லுார் ஆகிய துணை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம் நாளை முதல் வரும் ஏப்.,5,ம் தேதி வரை நடக்கிறது. இதில், கட்டணமின்றி புதிய ஆதார் பதிவு செய்யலாம். மேலும், ரூ.50 கட்டணம் செலுத்தி, பெயர் திருத்தம், முகவரி மற்றும் மொபைல் எண் மாற்றம் செய்யலாம். ரூ.100 கட்டணம் செலுத்தி பயோமெட்ரிக் திருத்தம் செய்யலாம். பொதுமக்கள் தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்று ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை