உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெருமாள் கோவிலில் ராமருக்கு அபிஷேகம்

பெருமாள் கோவிலில் ராமருக்கு அபிஷேகம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ராமர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.அயோத்தியில் குழந்தை ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததையொட்டி, கள்ளக்குறிச்சியில் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், சீதை, லடசுமணர், அனுமன், ஸ்ரீராமர் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கலசாபிஷேகம் செய்யப்பட்டது.சர்வ அலங்காரத்திற்குப்பின், சுவாமிகளுக்கு மூலமந்திரங்களை வாசித்து, அர்ச்சனை செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார். கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சீதாலஷ்மண அனுமன் சமேத கோதண்டராமர் கோவிலில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி