மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
11-Sep-2024
சங்கராபுரம் : மண்டல அளவிலான மென்பொருள் வடிவமைப்பு போட்டியில் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்திய மண்டல அளவிலான மென்பொருள் வடிவமைப்பு போட்டி கள்ளக்குறிச்சி எ.கே.டி., பாலிடெக்னிக் கல்லுரியில் நடந்தது.இப்போட்டியில் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, இயந்திரவியல் துறையில் முன்றாமாண்டு படிக்கும் மாணவர்கள் அலெக்ஸ் லியோன், கதிரவன், ஆகாஸ்ராஜ், கவிகுமார் ஆகியோர் பங்கேற்று இரண்டாம் பரிசு பெற்றனர். அவர்களுக்கு 5,000 ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.அவர்களை கல்லுாரி முதல்வர் சேட்டு, துறை தலைவர்கள் லலிதா, கேசவன், முதல்வரின் நேர்முக உதவியாளர் சரவணன், பொருளாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பாராட்டினர்.
11-Sep-2024