உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மாற்றுத் திறனாளிகளுக்கு வயது தளர்வு முகாம்

 மாற்றுத் திறனாளிகளுக்கு வயது தளர்வு முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வயது தளர்வு முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த் துறை மூலம் 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான வயது தளர்வு சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் 196 பேர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்தனர். முகாமில் பங்கேற்ற 2 மாற்றுத் திறனாளிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலிகளை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். தொடர்ந்து உதவி உபகரணங்கள் மாற்றுத் திறனாளிகளின் இயல்பு வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். எனவே மாற்றுத்திறனாளிகள் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் அந்தோணிராஜ், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை