உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மழையால் பாதித்த விவசாய நிலங்கள்; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

மழையால் பாதித்த விவசாய நிலங்கள்; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கள்ளக்குறிச்சி; கனமழையில் பாதித்த விவசாய விளை நிலங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக கனமழையில் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது.வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலம் பயிர் சேத பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனருமான மதுசூதன் ரெட்டி, கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழையால் சேதமடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார்.அதில் சித்தலுார், மடியனுார், பாசார் ஆகிய கிராமங்களில் பருத்தி, உளுந்து, மரவள்ளி கிழங்கு வயல்களை பார்வையிட்டு சேதவிவரங்கள், பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சேத பாதிப்பு கணக்கெடுப்பு மற்றும் நிவாரண உதவிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.அதில் நெல், சிறுதானிய வகைகள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 856 ெஹக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டதில், 50 ஆயிரத்து 314 ெஹக்டர் பரப்பளவு விளைநிலங்கள் பாதித்துள்ளதாக கணக்கிடக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழையில் பாதித்த விவசாய பயிர்கள் கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வின் போது சப் கலெக்டர் ஆனந்தகுமார் சிங், வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை