உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மந்தைவெளி பொதுக்கூட்ட மேடை அருகே சித்தேரி தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சுடர்மணி, 47; என்பவர் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து சுடர்மணியை கைது செய்து, அவரிடமிருந்த 6 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,200 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை