மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர்கள் மாலை நேர ஆர்ப்பாட்டம்
05-Nov-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மொபைல்போன் டார்ச் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஷீலாராணி தலைமை தாங்கினார். செயலாளர் பிரேமா, துணை செயலாளர்கள் கலா, லட்சுமி முன்னிலை வகித்தனர். இதில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக நியமனம் செய்தல், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை முழுமையாக நிரப்புதல், மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்குதல், பணி உயர்வு வழங்குதல் உட்பட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கையில் மொபைல்போன் டார்ச்சை ஒளிரவிட்டபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
05-Nov-2025