உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாரதி மகளிர் கல்லுாரியில் விளையாட்டு ஆண்டு விழா

பாரதி மகளிர் கல்லுாரியில் விளையாட்டு ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி, : தச்சூர் பாரதி மகளிர் கல்லுாரியில் விளையாட்டு ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, செயலாளர் லட்சுமி கந்தசாமி தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் சுபா வரவேற்றார். சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.விழாவில் ஆக்சாலிஸ் பள்ளி நிறுவனர் பாரத்குமார், செயலாளர் சாந்தி வாழ்த்திப் பேசினர். கல்லுாரி மாணவிகளுக்கு வாலிபால், துரோ பால், கோ-கோ, கபடி, செஸ், கேரம் போர்டு, இறகு பந்து, ஓட்டபந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.போட்டிகளை விளையாட்டுத் துறை பேராசிரியர்கள் அசோக்குமார், சாந்தி செய்திருந்தனர். விழாவில் பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை