ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசு பணியாளர்களுக்கான ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., சத்யராஜ் தலைமை தாங்கினார். இதில் ஊழல் மற்றும் தடுப்புச்சட்டங்கள் மற்றும் சட்டங்களின் கீழ் வழங்கப்படும் தண்டனைகள் குறித்து அரசுப் பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் மற்றும் அரசுப் பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக கலெக்டர் மற்றும் எஸ்.பி., தலைமையில் அரசு அலுவலர்கள் ஊழல் மற்றும் தடுப்பு விழிப்புணர்வு நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.