உள்ளூர் செய்திகள்

பரிசளிப்பு விழா

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுாரில், தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில் நடந்த பொங்கல் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.பொங்கல் பண்டிகையையொட்டி, சிறுவர், பெரியவர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.முன்னாள் கவுன்சிலர் மொபின்கான், நகர செயலாளர் காமராஜ், துணைச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பு தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.ஒன்றிய அமைப்பாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை