உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிக்கு மாதிரி ஓட்டு பதிவு மூலம் விழிப்புணர்வு

பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிக்கு மாதிரி ஓட்டு பதிவு மூலம் விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பார்வை திறன் குறையுடைய மாற்றத்திறனாளிகளுக்கு மாதிரி மின்னணு ஓட்டு பதிவு மையத்தில் வாக்குபதிவு தொடர்பாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், லோக்சபா தேர்தலையொட்டி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலங்களில் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் வாக்குபதிவு தொடர்பாக மாதிரி ஓட்டு பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் புதிய வாக்காளர்கள் உட்பட பொதுமக்களிடம் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாதிரி மின்னணு ஓட்டு பதிவு மையத்தில் பார்வை திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் தொட்டு பார்த்து வாக்கு பதிவு செய்வது தொடர்பாக நேற்று செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உட்பட தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை