உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 5 கி.மீ., இழுத்து வரப்பட்டது ரயில் இன்ஜினில் சிக்கிய உடல்

5 கி.மீ., இழுத்து வரப்பட்டது ரயில் இன்ஜினில் சிக்கிய உடல்

விருத்தாசலம்:திருச்சி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் சிக்கிய வாலிபர் உடல், 5 கி.மீ., துாரம் இழுத்து செல்லப்பட்டது. ஹவுரா - திருச்சி ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் இரவு, 12:30 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனை கடக்கும்போது, 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரயில் இன்ஜினில் சிக்கினார். அதிவேகமாக சென்ற ரயிலை, 5 கி.மீ., தொலைவில், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மேப்புலியூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே லோகோ பைலட் நிறுத்தி சோதனை செய்தார். அதில், வாலிபரின் உடல், ரயில் இன்ஜினில் சிக்கியபடி, இழுத்து வரப்பட்டிருந்தது. தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார், சடலத்தை மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. விபத்து காரணமாக, ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயில், மேப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு, 20 நிமிடங்கள் தாமதமாக சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை