உள்ளூர் செய்திகள்

 நுாலக வார விழா  

சங்கராபுரம்: சங்கராபுரம் கிளை நுால கத்தில் 58 வது தேசிய நுால க வார விழா நேற்று நடந்தது. வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இன்னர்வீல் கிளப் தலைவி இந்துமதி, வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், சங்கை தமிழ் சங்க தலைவர் சுப்பராயன், திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமபதி முன்னி லை வகித்தனர். நுாலகர் மணிமேகலை வரவேற்றார். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன், சீனுவாசன், ஜெயசக்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நுாலகத்தை பயன்படுத்தி அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நுாலகர்கள் அன்பழகன், சுப்பாரெட்டி, ஜானகி மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நுாலகர் நந்தினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி