உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம், செங்குந்தர் நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 53; வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 28ம் தேதி குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார்.அப்போது, வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நகை மற்றும் 7,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீ சார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை